1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 28 மார்ச் 2017 (14:50 IST)

ஷங்கரின் 2.0 படத்தில் குள்ள ரஜினி: புதிய தகவல்கள்!

2010ஆம் ஆண்டில் வெளியான எந்திரன் திரைப்படத்தின் தொடர்ச்சியாக வெளிவரும் 2.0 படத்தில் ரஜினிகாந்த், அக்சய் குமார்,  எமி ஜாக்சன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். முதல் பாகத்தை விட இன்னும் பிரமாண்டமாகவும், இந்தியாவில்  அதிக பட்ஜெட்டில் உருவாகிவரும் படம் என்ற பெருமையோடு 2.0 படம் உருவாகி உள்ளது. தற்போது படத்தின் படப்பிடிப்புகள்  இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

 
ரஜினி 2.0 படத்தில் விஞ்ஞானி மற்றும் ரோபோவாகவும், அக்‌ஷய் குமார் வில்லன் ரோலிலும் நடிப்பதாக ஏற்கனவே தகவல்  வெளியான நிலையில் இப்போது படம் பற்றி புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஜினி விஞ்ஞானி மற்றும் ரோபோவாக  மட்டுமல்ல 5 வித்தியாசமான தோற்றத்தில் வர உள்ளாராம். அதில் இரண்டு ரோலில் குள்ள மனிதராக நடிக்க இருக்கிறார்  என்று கூறப்படுகிறது. ரஜியை போன்றே அக்‌ஷய் குமார் வித்தியாசமான பல வேடங்களில் சுமார் 10-க்கும் மேற்பட்ட  வேடங்களில் தோன்ற இருப்பதாக கூறப்படுகிறது.
 
இந்திய சினிமாவில் தற்போது இரண்டு படங்களுக்கு தான் கடும் போட்டி நிலவுகிறது. ஒன்று அடுத்த மாதம் வெளியாக உள்ள  பாகுபலி 2. இன்னொன்று 2.0 படம். இதில் எந்த படம் எதை முறியடிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.