டப்பிங்கிலும் சாதனை படைத்த ‘பாகுபலி’ இயக்குநர்..


Cauvery Manickam| Last Modified செவ்வாய், 4 ஜூலை 2017 (18:53 IST)
ராஜமெளலி இயக்கிய ‘மகதீரா’ படம், டப்பிங்கிலும் சாதனை படைத்துள்ளது.

 

 
ராம் சரண், காஜல் அகர்வால் நடிப்பில் 2009ஆம் ஆண்டு வெளியான தெலுங்குப் படம் ‘மகதீரா’. தமிழிலும் இதே பெயரில் டப் செய்து வெளியிடப்பட்டது இந்தப் படம். இதற்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பால், ஹிந்தியிலும் டப் செய்யப்பட்டு, யூடியூபில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. 
 
இந்தப் படத்தை, இதுவரை 100 மில்லியன் பேர் பார்த்து ரசித்துள்ளனர். ஒரு டப்பிங் படத்திற்கு, அதுவும் பாலிவுட் ரசிகர்களிடம் டப்பிங் படம் இந்த அளவிற்கு சென்று சேர்ந்திருப்பது, இதுவே முதன்முறை என்கிறார்கள். ‘பாகுபலி’ மூலம் உலக அளவில் புகழ்பெற்ற ராஜமெளலிக்கு, இதுவும் ஒரு சிறப்பாக அமைந்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :