செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 13 அக்டோபர் 2017 (22:04 IST)

டபுள் ட்ரீட்: அடுத்து இரண்டு படங்களை பற்றி வாய் திறந்த பாகுபலி இயக்குனர்...

பாகுபலி இரண்டு பாகங்களையும் இயக்கிவிட்டு, படத்தின் மாபெரும் வெற்றியை கொண்டாடிக் கொண்டு சற்று ஓய்வில் இருக்கிறார் இயக்குனர் ராஜமெளலி. 


 
 
பலர் அவரது அடுத்த படம் என்னவென்று ஆவலுடன் எதிர்ப்பார்த்து வந்த நிலையில், தனது அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ராஜமெளலி.
 
வரலாற்று கதையை இயக்கி ஹிட் கொடுத்ததும், தனது அடுத்த படத்தில் சமூக பிரச்சைனையை கையில் எடுக்கவுள்ளார். ஆம், சமூக அக்கறையுடன் கூடிய படமொன்றை இயக்க இருக்கிறார். 
 
இந்த படத்தை டி.வி.வி.தனய்யா தயாரிக்கவுள்ளார். இப்படம் எந்த மொழியில் எடுக்கபப்டும் யார் நாயகன், நாயகி என்ற எந்த ஒரு தகவலையும் அவர் வெளியிடவில்லை.
 
இந்த படத்தை முடித்தவுடன் 2019 ஆம் ஆண்டு மகேஷ்பாபுவை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார் என்பதையும் தெரிவித்துள்ளார். இந்த படத்தை கே.எல்.நாராயணா தயாரிக்கவுள்ளார்.