தமிழ் பொண்ணு மாதிரி இரு... ஆசையா போட்டோ போட்டா ஆளாளுக்கு அட்வைஸ் பண்றாங்கப்பா!
பிக் பாஸ் குயின் "ஓவியா" என்றால் பிக் பாஸ் பிரின்சஸ் "ரைசா"...! அந்த அளவிற்கு பிக் பாஸ் சீசன் ஒன்றில் இவர்கள் இருவரும் பெரும் பிரபலமடைந்து தங்களுக்கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவர்கள் இவருக்கும் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உருவாக பட வாய்ப்புகளும் மல மலவென குவியத்தொடங்கியது. இதனை ரைசா சரியான நேரத்தில் மிகவும் ஷார்ப்பாக பயன்படுத்திக்கொண்டார். இந்நிகழ்ச்சிக்கு முன்னரே தனுஷின் விஐபி- 2 படத்தில் நடித்திருந்தார். பின்னர் ஹாரிஸ் கல்யாணுடன் அவர் நடித்த ‘பியார் பிரேமா காதல்’ செம ஹிட் அடித்தது. அதையடுத்து பிறகு ஜி.வி. பிரகாஷ் உடன் "காதலிக்க யாருமில்லை" என்ற படத்தில் நடித்து வருகிறார்.
அத்துடன் விஷ்ணு விஷால் நடித்துள்ள FIR, "அலைஸ்" உள்ளட்ட படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கத்தில் ஹாட்டான போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார். அந்தவகையில் தற்போது ஊரடங்கு நேரத்தில் ஆரஞ்சு கலரில் அட்டகாசமான உடையணிந்து செம ஹாட் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு வந்துள்ள கமெண்ட்ஸ்களை கொஞ்சம் பாருங்கள்..