1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: ஞாயிறு, 19 பிப்ரவரி 2017 (12:53 IST)

ராகவா லாரன்ஸ் செய்த உலக சாதனை

நடிகர், இயக்குனர் ராகவா லாரன்ஸ் திரைத்துறையில் மட்டுமின்றி பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறார் என்பது  அனைவ்ரும் அறிவர். சமீபத்தில் நடந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் தேவையான உதவி செய்ததோடு ஆதரவு குரலும் கொடுத்தார்.




இந்நிலையில் நேற்று ஜல்லிக்கட்டு போராட்டத்தின் வெற்றிவிழா கொண்டாடப்பட்டது. ராகவா லாரன்ஸ் மற்றும் இளைஞர்கள் கொண்டாடிய இந்த விழாவில் 1200 கிலோ கேக் வெட்டப்பட்டது. இதற்கு முன்னர்  1040 கிலோ கேக் மட்டுமே உலக சாதனையாக இருந்த நிலையில் தற்போது ஜல்லிக்கட்டு வெற்றிக்கான கேக் 1200 கிலோவாக இருந்ததால் இது உலக சாதனையாக கருதப்படுகிறது.

இந்த வெற்றி கொண்டாட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் உரையாற்றிய ராகவா லாரன்ஸ், 'இந்த போராட்டத்தின்போது உயிர்விட்ட இரண்டு இளைஞர்களின் குடும்பத்திற்கு தான் ஒரு மகனாக இருந்து அந்த குடும்பத்தின் அனைத்து தேவைகளையும் கவனித்து கொள்வதாக உறுதி கூறினார்.