1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 23 செப்டம்பர் 2021 (21:34 IST)

சினிமா செத்து போய் விட்டது ; நடிகர் ராதாரவி வேதனை

சினிமா செத்துப் போய்விட்டது என பிரபல நடிகர் ராதாரவி வேதனையுடன் தெரிவித்துள்ளார் இன்று நடைபெற்ற ருத்ரதாண்டவம் என்ற திரைப்படத்தின் பிரஸ் மீட்டில் அவர் கலந்து கொண்டார் இந்த படத்தில் அவர் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியபோது சினிமா செத்துப் போய்விட்டது என்றும் நடிப்பு மற்றும் திறமைக்கு மரியாதை இல்லாமல் போய்விட்டது என்றும் வேதனையுடன் தெரிவித்தார்
 
கார்ப்பரேட் நிறுவனத்துக்கு எதிராக கருத்து தெரிவித்து படங்களில் வசனம் பேசும் ஹீரோக்கள் அதே கார்ப்பரேட் நிறுவனங்கள் தயாரிக்கும் படங்களில் தான் நடித்து வருகின்றனர் என்றும் அவர் பெரிய நடிகர்களை குற்றஞ்சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த படம் அக்டோபர் 1ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது