வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வெள்ளி, 14 மே 2021 (11:32 IST)

கிர்ர்ர்ர்னு தல சுத்துது.... கயிறு கட்டி அந்தரத்தில் தலைகீழா தொங்கும் ராய் லட்சுமி!

தமிழில் நடிகர் விக்ராந்த் நடித்த 'கற்க கசடற' என்ற படத்தில் அறிமுகமானார் நடிகை ராய் லட்சுமி. அதன்பிறகு ஜெயம்ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் பேராதரவை பெற்றார். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு,மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார் ராய் லட்சுமி.
 
பிறகு அம்மணிக்கு அரண்மனை, காஞ்சனா, மங்காத்தா என தொடர்ச்சியாக லக் அடித்தது. இடைவிடாது அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார். இருந்தாலும் இவரால் முன்னணி நடிகைகளில் ஒருவராக வரமுடியவில்லை. 
 
அதனால் உடல் எடையை குறைத்து பாலிவுட் பக்கம் தாவிய ராய் லட்சுமி அங்கு கவர்ச்சிக்கு பஞ்சம் காட்டாமல் தாராளமாக இருந்து வந்தார். இதற்கிடையில் சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் ராய் லட்சுமி கயிறு கட்டி அந்தரத்தில் தலைகீழாக தொங்கியபடி ஒர்க் அவுட் செய்த வீடியோ ஒன்றை வெளியிட்டு பிரம்மிப்பூட்டியுள்ளார்.