திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 8 ஏப்ரல் 2024 (11:48 IST)

நம்ம புஷ்பாவா இது? காளியாக அவதாரம் எடுத்த புஷ்பா..! – புஷ்பா 2 டீசர் செம ட்ரெண்டிங்!

Pushpa 2
இன்று அல்லு அர்ஜூன் பிறந்தநாளில் தெலுங்கு ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புஷ்பா 2 படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.



தெலுங்கு இயக்குனர் சுகுமாரன் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்து கடந்த 2021ம் ஆண்டில் வெளியான படம் ‘புஷ்பா: தி ரைஸ்’. இந்த படத்திற்கு தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்திருந்தார். இந்த படம் தெலுங்கில் மட்டுமல்லாது கன்னடம், தமிழ், இந்தி என பல மொழிகளிலும் வெளியாகி பரவலாக வரவேற்பையும், ரசிகர்களையும் பெற்றது. முக்கியமாக இந்தில் பெல்ட்டில் இந்த படம் நல்ல வசூல்.

இந்நிலையில் நீண்ட காலமாக ஷூட்டிங்கில் இருந்து வந்த இரண்டாம் பாகமான புஷ்பா 2: தி ரூல் படத்தின் அப்டேட்டிற்காக ரசிகர்கள் ஆவலாக காத்திருந்தனர். இன்று அல்லு அர்ஜூன் பிறந்தநாளை சிறப்பிக்கும் விதமாக புஷ்பா 2 டீசரை வெளியிட்டுள்ளது.

எந்த பெரிய நடிகர்களும் செய்ய தயங்கும் பெண் உடை அணிந்த கதாப்பாத்திரத்தில் தோன்றியுள்ளார் அல்லு அர்ஜூன். காளி தேவி போன்ற பெண் தோற்றத்தில் புஷ்ப ராஜ் காலால் சேலை முந்தானையை தூக்கி போடுவதும், ரவுடிகளை தூக்கி போட்டு மிதிப்பதும் ஆக்‌ஷன் ஹீரோ மாஸ் ஒப்பனிங்கில் புதுரகம். இது ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்துள்ளது. புஷ்பா 2 ஆகஸ்டு 15 அன்று ரிலீஸாக உள்ள நிலையில் இப்போதே எதிர்பார்ப்பை ஏற்படுத்த தொடங்கியுள்ளது.

Edit by Prasanth.K