1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: வெள்ளி, 4 ஜூன் 2021 (08:44 IST)

தனுஷோடு முரண்பாடு ஏற்பட்டது உண்மைதான்… ஜகமே தந்திரம் தயாரிப்பாளர் ஓபன் டாக்!

ஜகமே தந்திரம் படத்தின் தயாரிப்பாளர் ஓடிடி வெளியீடு குறித்து தனக்கும் தனுஷுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது உண்மைதான் எனக் கூறியுள்ளார்.

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில ஜகமே தந்திரம் படம் தயாராகி ரிலிஸுக்கு காத்திருக்கிறது. வொய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தினை தயாரிக்கின்றனர். தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி இப்படத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படம் தனுஷ் இதுவரை நடித்த படங்களிலேயே அதிக பொருட்செலவில் உருவாகிய படம்.

இந்த படத்தின் கொரோனா காரணமாக தள்ளிப்போய்க்கொண்டே இருந்ததால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படும் சூழல் உருவானது. அதனால் படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய முடிவெடுத்தார் நெட்பிளிக்ஸுக்கு கொடுத்தார். ஆனால் இந்த முடிவு தனுஷுக்கு பிடிக்கவில்லை என்றும் அவர் ஓடிடியில் ரிலீஸ் செய்வதையே விரும்பினார் என்றும் சொல்லப்பட்டது. அதுமட்டுமில்லாது தனுஷ் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் ஆகிய இருவரும் தயாரிப்பாளரின் இந்த முடிவால் அவர் மேல் கோபமாக இருப்பதாகவும் சொல்லப்பட்டது.

இதுவரை இப்போது முதல்முறையாக தயாரிப்பாளர் சஷிகாந்த் மௌனம் கலைத்துள்ளார். அதில் ‘இந்த படம் திரையரங்குகளில் வெளியானால நன்றாக இருக்கும் என தனுஷ் கூறினார். அவரும் படத்தின் நல்லதுக்காகதான் பேசினார். ஆனால் இவ்வளவு பெரிய பொருட்செலவில் உருவான படத்தை எத்தனை நாளுக்கு கையில் வைத்திருந்து வட்டி கட்டுவது. இப்போது கூட திரையரங்கு ரிலிஸ் என்றால் எப்போது என்பது உறுதி இல்லாமல்தானே உள்ளது.இப்போது இந்த படம் 200 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் உள்ள தளத்தில் ரிலீஸாக போகிறது. அமெரிக்காவில் இந்த படத்தை பற்றி பேசுகிறார்கள். ஒரு தயாரிப்பாளராக எனக்கு அது பெருமை’ எனக் கூறியுள்ளார்.