விஷாலை ஓட ஓட விரட்டி அடிக்க வேண்டும்! கலைப்புலி எஸ்.தாணு ஆவேசம்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் புதியதாக களம் காணும் விஷால் அணியினர்களை பார்த்து சீனியர் அணி அச்சமடைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
நடிகர் சங்கத்தில் சீனியர்களை விரட்டியடித்தது மட்டுமின்றி பல்வேறு ஊழல்களை விஷால் அணி கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேபோல் தயாரிப்பாளர் சங்கத்திலும் நடந்து விடுமோ என்பதுதான் இப்போதைய நிர்வாகிகளின் அச்சத்திற்கு காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று கலைப்புலி எஸ். தாணு செய்தியாளர்களிடம் பேசியபோது விஷாலை மக்கள் விரைவில் ஓட ஓட விரட்டியடிப்பார்கள் என்றும், அரசியல் நப்பாசையால் விஷால் வேண்டுமென்றே பழி கூறுவதாகவும் கூறினார்.
தொடர்ந்து ஃபிளாப் படங்களை கொடுத்து தயாரிப்பாளர்களின் வாழ்க்கையை கெடுத்த விஷால். தயாரிப்பாளர் சங்கத்தை எப்படி விமர்சிக்கலாம் என்று கேள்வி கேட்டுள்ள தாணு, அரசியல் ஆசைக்காக பதவிக்கு வரத் துடிப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார்
விஷால் மீது நடிகர் சங்க தலைவர் நாசர் உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து நடிகர் சங்கத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்றும் இல்லையென்றால் அந்த வேலையை நாங்கள் செய்வோம்' என்றும் தாணு கூறினார்.