1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: திங்கள், 26 ஜூன் 2017 (10:19 IST)

விஐபி 2 படம் வெளியாவதில் சிக்கல்

சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கம், தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸும், கலைப்புலி எஸ்.தாணுவின் வி.கிரியேஷன்ஸ்  நிறுவனமும் இணைந்து தயாரித்து வரும் படம் ‘விஐபி 2’. இப்படத்தில் தனுஷுடன் காஜோல், அமலா பால், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன் உட்பட பலர் நடித்துள்ளனர்.

 
விஐபி 2 படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மும்பையில் நடைபெறவிருக்கும் நிலையில், இந்த விழாவுக்கு தமிழ்  மீடியாக்களை முற்றிலுமாக புறக்கணித்துள்ளனர்.
 
இப்படத்தை தனுஷின் பிறந்த நாளான ஜூலை 28-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். கபாலி படத்தினால் ஏற்பட்ட நஷ்டத்திற்கு உரிய இழப்பீடு தந்தால்தான் ‘விஐபி-2’ படத்தை வெளியிட அனுமதிப்போம் என போர்க்கொடி தூக்கியுள்ளனர்  விநியோககஸ்தர்கள். இல்லாவிட்டால் ரெட் கார்டு போடுவோம் என்று கலைப்புலி தாணுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் விஐபி 2 வெளியாவதில் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.