ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: புதன், 18 மே 2016 (11:33 IST)

தனியார் பேருந்துகளில் புதுப்படம் - நடிகர் சங்கம் நடவடிக்கை

தனியார் பேருந்துகளில் புதுப்படம் - நடிகர் சங்கம் நடவடிக்கை

நாசர் தலைமையிலான நிர்வாகிகள் பொறுப்பேற்ற பிறகு நடிகர் சங்கம் பல்வேறு பிரச்சனைகளில் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது.


 


குறிப்பாக திருட்டு டிவிடிக்கு எதிராக தொடர் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
 
தனியார் பேருந்துகளில் புதுப்படங்கள் திரையிடுவது தமிழகத்தில் தொடர்ந்து நடந்து வருகிறது. அதற்கு எதிராக கடும் நடவடிக்கையில் நடிகர் சங்கம் இறங்கியுள்ளது. தெறி படத்தை திரையிட்ட தனியார் தளனியார் பேருந்தை மடக்கி காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
 
மனிதன் படத்தை தனியார் பேருந்து ஒன்றில் திரையிடுவதாக தகவல் கிடைத்ததன் அடிப்படையில் நடிகர் ஸ்ரீமன் தலைமையில் சிலர் அப்பேருந்தை சென்னை மதுரவாயல் பகுதியில் மடக்கிப் பிடித்தனர். பிறகு மதுரவாயல் காவல் நிலையத்தில் இது தொடர்பாக வழக்கும் போடப்பட்டது.
 
மே 20 வெளியாகும் தனது மருது படத்தின் திருட்டு டிவிடி வெளியானால், பார்த்துக் கொண்டிருப்பதில்லை, கடும் நடவடிக்கையில் இறங்குவேன் என்று விஷால் கூறியுள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்