வியாழன், 19 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 19 ஜூலை 2024 (13:52 IST)

பிரபல ஓடிடியில் வெளியான பிரித்விராஜின் ஆடு ஜீவிதம்…!

மலையாள இலக்கியத்தில் பெரும் கவனத்தை ஈர்த்த படைப்பு பென் யாமின் எழுதிய ‘ஆடு ஜீவிதம்’  நாவல். இந்த நாவல் தமிழுலும் மொழி பெயர்க்கப்பட்டு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த படத்தில் பிருத்விராஜ், அமலா பால் ஆகியோர் நடிக்க ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க ப்ளஸ்ஸி இயக்கியுள்ளார். 8 ஆண்டுகளுக்கும் மேலாக உருவாக்கத்தில் இருந்த இந்த திரைப்படம் மார்ச் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆனது.

கேரளாவில் இருந்து அரபு நாட்டுக்கு வேலைக்கு செல்லும் ஒரு இளைஞன் அங்கு ஆடு மேய்ப்பவராக பாலைவனத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளால் அவர்  வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதே ஆடு ஜீவிதம் படத்தின் கதை. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

இந்த படம் ரிலீஸாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், 150 கோடி ரூபாய் வசூலை ஒட்டுமொத்தமாக ஈட்டியது. திரையரங்கில் ரிலீஸாகி 2 மாதங்களுக்கு மேல் ஆனாலும் இந்த படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகாமல் இருந்தது. இந்நிலையில் இப்போது நெட்பிளிக்ஸ் ஓடிடியில் இன்று முதல் ஸ்ட்ரீம் ஆகிவருகிறது.