பிரபாஸை பாராட்டி மறக்க முடியாத பரிசளித்த ராஜமெளலி!

Sasikala| Last Modified வியாழன், 27 ஏப்ரல் 2017 (11:09 IST)
ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா, சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள பாகுபலி 2 படம் நாளை  ரிலீஸாக உள்ளது. இப்படம் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் உலகம் முழுதும் வெளியாகிறது. இந்த படம் ரூ.1000 கோடி வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்களில் நடிப்பதற்காக பிரபாஸ் 5 ஆண்டுகள் வேறு எந்த படங்களிலும் நடிக்கவில்லை. 82 கிலோ எடை இருந்த பிரபாஸ் பாகுபலி கதாபாத்திரத்திற்காக தனது எடையை 105 கிலோவாக உயர்த்தினார். கிட்டத்தட்ட 600  நாட்கள் பாகுபலி படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.
 
பாகுபலி கதாபாத்திரத்திற்கு பிரபாஸை தவிர வேறு யாரையும் என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை என்று  பெருமிதத்தோடு கூறும் ராஜமெளலி. பாகுபலி படத்திற்காக 5 ஆண்டுகளை அர்ப்பணித்த பிரபாஸை பாராட்டி படத்தில் அவர் பயன்படுத்திய போர் கவசத்தை அவருக்கு பரிசளித்துள்ளார் ராஜமெளலி.


இதில் மேலும் படிக்கவும் :