1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 13 ஜூன் 2017 (16:43 IST)

80 கோடி சம்பளம்: பிரபாஸுக்கு உச்சத்தில் மார்கெட்!!

இரண்டு பாகங்களாக வெளியான பாகுபலி உலக அளவில் பெரும் வெற்றியை பெற்றுள்ளது. இதனால் படத்தின் இயக்குனர் படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் அனைவரும் புகழின் உச்சத்தில் உள்ளனர்.


 
 
இது ஒரு புறம் இருக்க படத்தின் நாயகனான பிரபாஸுக்கு தான் ரசிகர் பட்டாளம் அதிகரித்து உள்ளது. பிரபாஸ் தற்போது சாஹோ என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கு கதாநாயகி வேட்டை தீவிரமாக நடந்து வருகிறது.
 
இந்நிலையில் சாஹோ படத்திற்கு அடுத்து பிராபாஸ் நடிக்கவுள்ள படத்தை பற்றி தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் ரோகித் ஷெட்டி இயக்கும் படத்தில் அடுத்து நடிக்க உள்ளாராம் பிரபாஸ். 
 
இந்த படத்தில் நடிப்பதற்கு பிரபாஸுக்கு 80 கோடி ரூபாய் சம்பலம் பேசப்பட்டுள்ளது என வட இந்தியாவின் பிரபல சமூக ஊடகத்தில் செய்து வெளியாகியுள்ளது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.