செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: சனி, 13 நவம்பர் 2021 (11:49 IST)

‘ராதே ஷ்யாம்’ சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிரபாஸ் நடித்த ‘ராதே ஷ்யாம்’ திரைப்படத்தின் முக்கிய அப்டேட் ஒன்றை படக்குழுவினர் சற்றுமுன் வெளியிட்டுள்ளனர் 
 
பிரபாஸ் நடிப்பில் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் ‘ராதே ஷ்யாம்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி என 5 மொழிகளில் உருவாகியுள்ள இந்த படம் ரூபாய் 400 கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் வரும் 15ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்