பிரபாஸ் ஒரு சோம்பேறின்னு சொல்லும் இயக்குநர்; ஆனால் ஷூட்டிங்கில்...
பாகுபலி படத்தில் நடிகர் பிரபாஸ் மட்டும் ஒத்துழைக்கவில்லை என்றால் பாகுபலி படம் சாத்தியமில்லை என இயக்குநர் ராஜமெளலி பலமுறை கூறியிருக்கிறார். தொடர்ந்து ஐந்தாண்டுகள் இந்த படத்திற்காக உழைத்த பிரபாஸ் ஒரு சோம்பேறி என இயக்குனர் தற்போது ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
படத்திற்காக என்னவேண்டுமானாலும் செய்வார், ஷூட்டிங்கில் ஆக்டிவாக இருப்பார் ஆனால் மற்ற நேரங்களில் சோம்பேறித்தனமாகவே இருப்பார். உதாரணமாக... செய்தியாலர் சந்திப்பு முடிந்து பிளைட் பிடிக்க இன்னும் அரை மணி நேரம் தான் உள்ளது, ஆனால் பிரபாஸ் அனைவரையும் பொறுமையாக உட்காருங்கள், போகலாம் என கூலாக உட்கார்ந்துவிட்டார்.
நான் நேரமாகிவிட்டது என்று சென்றுவிட்டேன். ஆனால் கியூ முடிந்து நான் உள்ளே செல்லும்போது சரியாக பிரபாஸும் உள்ளே வந்துவிட்டார். இயக்குநர் ராஜமெளலி பார்த்த போது "கியூ இருக்கும்னு அப்போவே சொன்னேனே ?" என்றார் பிரபாஸ்.