1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: வியாழன், 30 செப்டம்பர் 2021 (17:38 IST)

பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு என்ன பிரச்சனை!

நடிகரும் தயாரிப்பாளருமான பவர் ஸ்டார் சீனிவாசன் உடல்நலக் குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

லத்திகா என்ற மொக்கை படத்தை ஒரு வருடத்துக்கும் மேல் சொந்த செலவில் ஓட்டி ஏகப்பட்ட பப்ளிசிட்டி செய்து சினிமா உலகினரை ‘யார்றா இவரு’ என வியக்க வைத்தவர் பவர் ஸ்டார் சீனிவாசன். அதன் பின்னர் சந்தானத்தோடு நடித்த கண்ணா லட்டு திண்ண ஆசையா படத்தின் வெற்றியால் குறிப்பிடத்தகுந்த நகைச்சுவை நடிகராக உருவானார். ஆனாலும் செக் மோசடி வழக்கில் கைது என சில சர்ச்சைகளில் சிக்கி சிறை சென்று வந்தார். இப்போதும் சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இன்று அவர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து சிகிச்சையில் இருக்கும் அவருக்கு ரத்த அழுத்தத்தில் ஏற்பட்ட மாறுபாடு காரணமாக மயக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.