ஒரு பய கூட என்னை வந்து பார்க்கல; அழுது புலம்பும் பவர் ஸ்டார்


Abimukatheesh| Last Updated: சனி, 17 ஜூன் 2017 (17:43 IST)
மோசடி வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் நகைச்சுவை நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன், தன்னை யாரும் பார்க்க வருவதில்லை என மன வருத்தத்தில் உள்ளாராம். 

 

 
சொந்தமாக படம் எடுத்து ஓட்டிக்கொண்டிருந்த பவர் ஸ்டாருக்கு சந்தானம் மூலம் தமிழ் சினிமாவில் நல்ல வாய்ப்பு கிடைத்தது. அதைத்தொடர்ந்து பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துக்கொண்டிருந்தார். திடீரென மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  
 
சிறைக்கு சென்று இரண்டு மாதங்கள் ஆகியும் யாரும் இவரை பார்க்க சிறைக்கு செல்லவில்லையாம். வெளியில் இருக்கும் போது தினந்தோறும் சந்தித்தவர்கள் கூட தற்போது இவரை சிறைக்கு சென்று பார்க்கவில்லையாம். சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வருவபர்களிடம் தனது நண்பர்களுக்கு செய்தி சொல்லி அனுப்புகிறாராம்.
 
அப்படி இருந்தும் தற்போது வரை ஒருவர் கூட சென்று அவரை பார்க்கவில்லையாம். இதனால் சிறையில் தன்னை ஒருத்தன் கூட வந்து பார்க்கவில்லை என புலம்புகிறாராம்.   
 


இதில் மேலும் படிக்கவும் :