பிரபல பாலிவுட் நடிகர் மரணம்!

Sasikala| Last Modified வியாழன், 27 ஏப்ரல் 2017 (12:31 IST)
இந்தி திரையுலகில் கொடிக்கட்டி பறந்த மூத்த நடிகர் வினோத் கண்ணா. தபாங், தில்வாலே என பல படங்களில் இவர் நடித்துள்ளார். இவர் பல மாதங்களாக கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு வந்தார், இன்று சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தியுள்ளார். அவருக்கு வய்து 70.

 
பாலிவுட் திரையுலகில் 70களில் பிரபலமானவராக இருந்தவர் வினோத் கண்ணா. பின்னர் திரையுலகிலிருந்து விலகி அரசியலில் ஈடுபட்டார். தற்போது வரை பஞ்சாப் மாநிலத்தில் குர்தாஸ்பூர் தொகுதியின் பா.ஜ.க எம்.பியாக இருந்து வந்தார்.
 
பாலிவுட் நடிகர் வினோத் கண்ணா உடல் நலக் குறைபாடு காரணமாக மும்பையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்தி திரைஉலகில் 1970-களில் மிகவும் பிரபலமான நடிகராக இருந்தவர் வினோத் கண்ணா. இந்த நிலையில் புற்று நோயால் பாதிக்கப்பட்ட வினோத் கண்ணா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை  பலனளிக்காமல் இன்று உயிரிழந்தார்.
 
இவை பாலிவுட் மட்டுமின்றி ஒட்டு மொத்த இந்திய திரையுலகத்தினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :