1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 19 ஆகஸ்ட் 2023 (18:50 IST)

பிரபல நடிகர் பவன் 25 வயதில் மாரடைப்பால் மரணம்

pawan
தமிழ் மற்றும் இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான நடிகர் பவன்  நேற்று அதிகாலை  மும்பையில் உயிரிழந்தார்.
 

கர்நாடகம் மாநிலம் மாண்டியாவில் பிறந்தவர் நடிகர் பவன். இவர், தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் தொலைக்காட்சித் தொடர்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.

இந்த நிலையில், திடீர் மாரடைப்பால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகிறது.

இவர் கர்நாடகம் மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும்  தன்  பெற்றோருடன் மும்பையில் வசித்து வந்த  நிலையில்  நேற்று அதிகாலை நடிகர் பவன் (25 வயது)  தனது வீட்டில் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் கூறி வருகின்றனர்.

சமீபத்தில்,   நடிகர் விஜய் ராகவேந்திராவின் மனைவியும்  நடிகையுமான  ஸ்பந்தனா சுற்றுலாவுக்குச் சென்றபோது மாரடைப்பால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.