செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: திங்கள், 29 செப்டம்பர் 2014 (11:57 IST)

இணைய திருட்டு - உஷாரான பூஜை டீம்

எவ்வளவுதான் ரகசியமாக படக்காட்சிகளை பாதுகாத்தாலும் இணையத்தில் உலவும் திருடர்கள் ஒன்றிரண்டு காட்சிகளையாவது திருட்டுத்தனமாக வெளியிட்டு விடுகிறார்கள். ஜக்குபாய் வெளியாகும் முன்பே மொத்த படமும் இணையத்தில் வெளியானதை தமிழ் திரையுலகம் இன்னும் மறக்கவில்லை. 
ஹரி இயக்கத்தில் விஷால் நடித்து வரும் பூஜை படத்துக்கு யுவன் இசையமைத்து வருகிறார். பாடல்களை விஷால் தனது வி மியூஸிக் மூலமாக வெளியிடுகிறார். அவர் வெளியிடும் முதல் இசை இது.
 
இந்நிலையில் பாடல்களின் முதல்வரி மற்றும் யார் பாடியது போன்ற தகவல்கள் படம் சம்பந்தப்பட்டவர்கள் அறிவிக்காமலே இணையத்தில் வெளியாகி உள்ளன. இது படக்குழுவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பாடல்களின் வரியை வெளியிட்டவர்கள் பாடலையும், பாடல் காட்சியையும் வெளியிட்டால்...?
 
இந்த சந்தேகத்தைத் தொடர்ந்து மொத்த யூனிட்டும் உஷார்படுத்தப்பட்டுள்ளது.