வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : வெள்ளி, 13 மார்ச் 2020 (17:57 IST)

முதல் இரவில் அட்டகாசம் செய்யும் சாந்தனு... ஜோடியானார் அதுல்யா!

லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர், ஃபர்ஸ்ட் மேன் பிலிம் ஒர்க்ஸ் சிவசுப்பிரமணியன், சரவணபிரியன் தயாரிப்பில், இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கத்தில் கே. பாக்கியராஜ், சாந்தனு, அதுல்யா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது.

லிப்ரா புரொடக்ஷன்ஸ் சார்பாக 'நட்புன்னா என்னான்னு தெரியுமா' உள்ளிட்ட வெற்றிப் படங்களைத் தயாரித்த ரவீந்தர் சந்திரசேகர், ஃபர்ஸ்ட் மேன் பிலிம் ஒர்க்ஸ்' சிவசுப்பிரமணியன், சரவணபிரியன் ஆகியோருடன் இணைந்து, கே. பாக்கியராஜ், சாந்தனு, அதுல்யா ஆகியோர் நடிப்பில் இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கத்தில் ஒரு புதிய படத்தை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறார். இப்படத்தின் துவக்கவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

தென்னிந்திய மொழிகளில் தொலைக்காட்சி தொடர்கள் இயக்கிய அனுபவத்துடன், மலையாளத்தில்  'லாவெண்டர்', தமிழில் 'ஜாம்பவான்'  உள்ளிட்ட படங்களில் இணை - துணை இயக்குனராக பணியாற்றிய ஸ்ரீஜர் இப்படத்தை கதை, திரைகதை, வசனம் எழுதி இயக்குகிறார். பல்வேறு கலாட்டா கல்யாண திரைப்படங்களைப் பார்த்திருந்த நமக்கு, ஒரு ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக உருவாகவிருக்கும் இப்படம், புதுமணத் தம்பதிகளின் முதல் இரவில் நடைபெறும் முக்கிய பாரம்பரிய நிகழ்வுகளையும், சாங்கித்யங்களையும் நகைச்சுவை மாறாமல், சற்றும் விரசம் இல்லாமல் சுவராஸ்யமாக காட்சிப்படுத்த இருக்கிறது.


இப்படத்தில் கே. பாக்கியராஜ், சாந்தனு, அதுல்யா, மனோபாலா, ஆனந்த்ராஜ், மயில்சாமி, மொட்ட ராஜேந்திரன் ஆகியோருடன் ஒரு முக்கிய வேடத்தில் யோகி பாபு நடிக்க, பிராங்க் ராகுல், ராஜு, அதுல்யா, ரேஷ்மா, மதுமிதா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ரமேஷ் சக்கரவர்த்தி ஒளிப்பதிவில், ஜோமின் மேத்யூ படத்தொகுப்பை கவனிக்க, கலைக்கு நர்மதா வேணி பொறுப்பேற்று இருக்கிறார்.

தரண் இசையமைக்க, சதீஷ் கிருஷ்ணன் நடன அசைவுகளுக்கு பொறுப்பேற்க, அதிரடி காட்சி அமைப்புகளை நூர் கவனிக்கிறார். G அசோகன் இணை தயாரிப்பில், தயாரிப்பு மேற்பார்வை R K மனோகர் வசமும் நிர்வாக தயாரிப்பு K ஸ்ரீகாந்த் வசமும் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. லிப்ரா புரொடக்ஷன்ஸ் சார்பாக 'நட்புன்னா என்ன தெரியுமா' உள்ளிட்ட வெற்றிப் படங்களைத் தயாரித்த ரவீந்தர் சந்திரசேகர், ஃபர்ஸ்ட் மேன் பிலிம் ஒர்க்ஸ்' சிவசுப்பிரமணியன், சரவணபிரியன் ஆகியோருடன் இணைந்து, கே. பாக்கியராஜ், சாந்தனு, அதுல்யா ஆகியோர் நடிப்பில் ஒரு புதிய படம் பிரம்மாண்டமாக உருவாகிறது.