ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 25 மே 2023 (08:45 IST)

பொன்னியின் செல்வன் 2 ஓடிடி ரிலீஸ் எப்போது? முழுவிவரம்!

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட பலர் நடித்து வெளியாகியுள்ள படம் ‘பொன்னியின் செல்வன்’. கல்கி எழுதிய வரலாற்று புதினமான ‘பொன்னியின் செல்வன்’ நாவலை தழுவி இரண்டு பாகமாக உருவாக்கப்பட்ட இந்த படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. கிட்டத்தட்ட 400 கோடி ரூபாயை உலகளவில் வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து தற்போது பொன்னியின் செல்வன் 2ம் பாகம் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்த சூழலில் பல பகுதிகளில் ஹவுஸ் புல் காட்சிகளுடன் ஓடி வருகிறது. ஆனால் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

அதனால் தமிழ்நாட்டில் இந்த படம் பெரிதாக எடுபட வில்லை. முதல் பாகம் தமிழ்நாட்டில் மட்டும் 200 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்த நிலையில் இரண்டாம் பாகம் சுமார் 100 கோடி ரூபாய் அளவுக்குதான் வசூல் செய்துள்ளதாம். மேலும் தயாரிப்பாளர் பங்காக 51 கோடி ரூபாய்தான் கிடைத்துள்ளதாம்.

இந்நிலையில் இந்த படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் மே 26 ஆம் ஆதேதி பணம் கட்டி பார்க்கும் ரெண்ட்டல் முறையில் கிடைக்கும் எனவும் , ஜூன் 2 ஆவது வாரத்தில் இருந்து அமேசான் ப்ரைம் சந்தாதாரர்களுக்கு இலவசமாகப் பார்க்கக் கிடைக்கும் எனவும் சொல்லப்படுகிறது.