செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 10 நவம்பர் 2021 (10:37 IST)

ஓடிடியில் ரிலீஸ் ஆகும் பிரபுதேவாவின் அடுத்த படம்?

பிரபுதேவா நடித்த பொன்மாணிக்கவேல் என்ற திரைப்படம் ஏற்கனவே ஒரு சில ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்தி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாகவும் ஹாட் ஸ்டார் ஓடிடியில் இந்த படம் ரிலீஸ் ஆவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது 
 
ஏற்கனவே கடந்த சில வாரங்களில் நயன்தாராவின் நெற்றிக்கண், விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார், சசிகுமாரின் ‘எம்ஜிஆர் மகன்’ ஆகிய திரைப்படங்களில் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிய நிலையில் தற்போது பிரபுதேவாவின் பொன்மாணிக்கவேல் திரைப்படமும் ஹாட்ஸ்டாரில் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
பிரபுதேவா ஜோடியாக, நிவேதா பெத்துராஜ், சுரேஷ் மேனன், மகேந்திரன், சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் இமான் இசையில் வெங்கடேஷ் ஒளிப்பதிவில் சிவாநந்தீஸ்வரர் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் பிரபுதேவா முதன்முறையாக போலீஸ் கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது