ஒரு நாளைக்கு இரண்டரை லட்ச ரூபாய் கார் வாடகை கொடுத்த படக்குழு
நட்டி நடித்துள்ள ‘போங்கு’ படத்துக்காக, ஒரு நாளைக்கு இரண்டரை லட்ச ரூபாய் கார் வாடகை கொடுத்துள்ளனர்.
நட்டி நடிப்பில், தாஜ் இயக்கியுள்ள படம் ‘போங்கு’. ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். 2015ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தப் படம், எப்போது ரிலீஸ் ஆகும் எனத் தெரியவில்லை. ஆனால், இந்தப் படத்தைப் பற்றி சுவாரஸ்யமான தகவல் ஒன்று கிடைத்திருக்கிறது.
இந்தப் படத்தில், ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்று முக்கியப்பங்கு வகிக்கிறது. இதற்காக, குஜராத்தில் இருந்து ஒரு காரை வரவழைத்திருக்கிறார்கள். அத்துடன், ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்திடம் முறையான அனுமதியும் பெற்றுப் படமாக்கியிருக்கிறார்கள். அந்தக் காரின் ஒருநாள் வாடகை மட்டும் இரண்டரை லட்ச ரூபாயாம். கிட்டத்தட்ட ஒரு மாதம் வரை அந்தக் காரில் படம்பிடித்திருக்கிறார்கள்.
கார் மெக்கானிக்காக இருக்கும் ஒருவன், பின்னாளில் கார் திருடனாக மாறுவதுதான் கதை. இந்தப் படத்தில் ருகி சிங் ஹீரோயினாக நடித்திருக்கிறார். ஆனால், இருவருக்கும் ரொமான்ஸோ, டூயட்டோ இல்லையாம். ரொம்பவே வருத்தப்படுகிறார் நட்டி.