திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 17 ஜூன் 2021 (16:11 IST)

பொள்ளாச்சி சம்பவத்தைப் படத்தில் வைத்த முன்னணி நடிகர்!

நடிகர் சூர்யா நடிக்கும் அவரின்  40 ஆவது படத்தில் பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.

சூர்யாவின் 40 ஆவது படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி வருகிறார்.  இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க டி இமான் இசையமைக்க உள்ளர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்க முக்கியமானக் கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்க உள்ளார்.

கொரோனா இரண்டாம் அலை காரணமாக தள்ளிவைக்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. மேலும் இந்த படத்தைப் பற்றிய மற்றொரு அப்டேட்டாக படத்தின் கதை பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக செஒல்ல்ப்படுகிறது.