வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 1 ஜூன் 2020 (14:26 IST)

காட்மேன் இயக்குனர், தயாரிப்பாளர் மீது வழக்கு! – புகாரை தொடர்ந்து நடவடிக்கை!

சர்ச்சைக்குரிய வகையில் டீசர் வெளியிட்ட காட்மேன் வெப் சிரீஸ் குறித்து அதன் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜீ5 ஓடிடியில் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் “காட்மேன்” என்ற வெப் சிரீஸ் வெளியாக உள்ளது. டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தின் டீசர் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த நிலையில் இந்த இணைய தொடரின் டீசரில் பிராமண சமூகத்தை கொச்சைப்படுத்தும் விதமாகவும், இந்து மதத்தை தவறாக சித்தரிக்க முயலும் ரீதியிலும் உள்ளதாக சமூக வலைதளங்களில் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பாஜக தமிழக தலைவர் முருகன் மற்றும் பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகர் ஆகியோரும் இந்த தொடரை வெளியிட அனுமதிக்க கூடாது என்று கூறி வருகின்றனர். இந்நிலையில் காட்மேன் தொடர் குறிப்பிட்ட சமூகம் குறித்து அவதூறாக விமர்சிப்பதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது, இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுத்துள்ள போலீஸார் காட்மேன் தொடரின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.