1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 10 மார்ச் 2017 (05:13 IST)

சன்னிலியோன் குறித்து சர்ச்சைக்குரிய டுவீட். மன்னிப்பு கேட்டார் ராம்கோபால் வர்மா

உலக மகளிர் தினத்தில் பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா தனது டுவிட்டரில் உலகில் உள்ள அனைத்து பெண்களும் சன்னி லியோன் போன்று ஆண்களுக்கு மகிழ்ச்சியை தர வேண்டும் என விரும்புகிறேன் என்று பதிவு செய்திருந்தார். சன்னிலியோன் ஒரு ஆபாச நடிகை என்பதால் இந்த பதிவுக்கு பெரும் கண்டனம் எழுந்தது. குறிப்பாக சமூக வலைத்தளங்களில் ராம்கோபால் வர்மாவுக்கு கடும் எதிர்ப்புகள் வலுத்தன.



 


இந்த நிலையில் பெண்களை கொச்சைப்படுத்தி கருத்து வெளியிட்டதாக ராம்கோபால் வர்மா மீது  போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரில் ராம் கோபால் வர்மாவிம் டுவிட்டர் கணக்கை நிரந்தரமாக முடக்கவேண்டும் என்றும் அவரிடம் விசாரணை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் டுவிட்டரில் தெரிவித்த கருத்துக்கு தான் வருத்தப்படுவதாகவும், தவறாக கண்ணோட்டம் அதில் இருப்பதாக தெரிந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டு கொள்வதாகவும் ராம்கோபால் வர்மா தனது டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.