செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : சனி, 8 ஜூலை 2017 (12:55 IST)

‘ப்ளீஸ் எனக்கும் ஒரு பையனை அனுப்புங்க’; பிக் பாஸிடம் கேட்ட ரைசா

பிக் பாஸ் நிகழ்ச்சியில் 12வது நாளான நேற்று போட்டியாளர்கள் அனைவரும் ஓவியா மற்றும் ஆரவ் பற்றி பேசி கொண்டிருந்தனர். இதை பங்கேற்றுள்ள நடிகை ஓவியாவும், ஆரவ்வும் மிகவும் நெருங்கி பழகி வருகின்றனர். அவர்களை சக போட்டியாளர்கள் கிண்டல் செய்தும் வருகின்றனர்.

 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனைவரும் குழுவாக பிரிந்து பாட்டு, நடனம், நாடகம் என தங்கள் திறமைகளை மேடையில் அரங்கேற்றினர். இதற்காக ஓவியா ஆடை தேர்வு செய்வதை பற்றி பேசும்போது இன்று எனக்கு முக்கியமான நாள். என்ன உடை அணியலாம் என மற்ற பெண் போட்டியாளர்களிடம் கேட்டு கொண்டிருந்தார். அதற்கு ஆர்த்தி, காய்த்ரி, நமீதா ஆகியோர் சேலை,  சுடிதார் போன்ற பாரம்பரிய உடைதான் நல்லா இருக்கும் என கூறினார்.
 
இந்நிலையில் புதிய ஆடை அணிந்து வந்தவுடன், சக போட்டியாளர்கள் ஆடை அழகாக உள்ளதாக பாராட்டுகின்றனர். ரைசா  கூறுகையில் உன்னுடைய ட்ரஸ், இயர் ரிங் அழகாக உள்ளது என்கிறார். உடனே ஓவியா நான் போய் கொஞ்ச நேரம் ஆரவ்வுடன் பேசிட்டு வர்றேன் என்றார். அப்போது குறிக்கிட்ட ரைசா நமக்கும் இந்த மாதிரி கம்பெனிக்கு ஒரு ஆள் இருந்தா  நல்லா இருக்கும் என்று கூறினார்.
 
இது குறித்து தொடர்ந்து பேசுகையில் பிக் பாஸிடம் ப்ளீஸ் எனக்கும் ஒரு பையனை அனுப்புங்க என்று விளையாட்டாக  கூறியது மற்றவர்களுக்கு சிரிப்பை ஏற்படுத்தியது.