செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 22 டிசம்பர் 2020 (11:56 IST)

மிஷ்கினின் பிசாசு 2 ஆண்ட்ரியா லுக்.. உண்மையில் இருந்த அந்த பெண் யார்?

தமிழ் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் பிசாசு 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஆண்ட்ரியாவின் கெட்டப் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் வித்தியாசமான முயற்சிகள் மூலம் பெரும் பெயர் பெற்றவர் இயக்குனர் மிஷ்கின். இவரது இயக்கத்தில் சில வருடங்கள் முன்னதாக வெளியான பிசாசு திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில் அதன் இரண்டாம் பாகமான பிசாசு 2 ஐ இயக்குவதில் மும்முரமாக இறங்கியுள்ளார் மிஷ்கின்.

இந்த படத்தில் ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் ஆண்ட்ரியா பிறந்தநாளில் பிசாசு 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டது படக்குழு. அதில் பழைய கால உடையணிந்து ஆண்ட்ரியா இருப்பது போன்ற புகைப்படம் பெரிதும் பேசப்பட்டது.

இந்நிலையில் அந்த புகைப்படத்தில் ஆண்ட்ரியா கெட்டப் போலவே இருக்கும் உண்மையான ஒரு பெண்ணின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அந்த உண்மையான பெண் வேறு யாரும் இல்லை. ஆண்ட்ரியாவின் பாட்டியாம்! ஆண்ட்ரியா தனது பாட்டியின் சிறுவயது புகைப்படம் ஒன்றை பல வருடங்கள் முன்னமே இணையத்தில் பகிர்ந்திருந்தார். அதே போன்ற கெட்டப்பைதான் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் செய்திருக்கிறார்கள்.