பிரபல நடிகைக்கு மொட்டை போட்ட பெண் இயக்குனர்


sivalingam| Last Modified வியாழன், 31 ஆகஸ்ட் 2017 (16:11 IST)
கோ, ஏகன், கோவா உள்பட பல தமிழ் படங்களிலும் மலையாள, தெலுங்கு படங்களிலும் நடித்தவர் நடிகை பியா பாஜ்பாய். இவர் தற்போது தமிழ் மற்றும் மலையாள மொழியில் தயாராகி வரும் 'அபியும் அவனும்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.


 
 
பிரபல மலையாள நடிகர் டொவினோ தாமஸ் தமிழில் ஹீரோவாக இந்த படத்தில் அறிமுகமாகிறார். இந்த படத்தை பிரபல நடிகையும், தேசிய விருது பெற்ற இயக்குனர் அகத்தியன் மகளுமான விஜயலட்சுமி இயக்கியுள்ளார்.
 
இந்த நிலையில் இந்த படத்தின் ஒரு முக்கிய காட்சிக்காக பியா பாஜ்பாயை மொட்டை அடிக்கும்படி இயக்குனர் விஜயலட்சுமி கேட்டுக்கொள்ள, எந்தவித தயக்கமும் இல்லாமல் பியா மொட்டை அடித்து கொண்டாராம். இந்த படம் பியாவுக்கு ஒரு திருப்புமுனையை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :