புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 25 செப்டம்பர் 2020 (17:21 IST)

#couplechallange-ல் இளைஞர் செய்த போட்டோ எடிட்.. ஹாலிவுட் நடிகை டுவீட் ....இணையதளத்தில் வைரல்

ஃபேஸ்புக்கில்  அவ்வப்போது எதாவது சேலஞ்ஸ் வரும். தற்போது singlechallenge #couplechallange #familychallnege #childrenchallenge போன்ற சேலஞ்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஹாலிவுட்டில் பிரபல நடிகை அலெக்ஸாண்ட்ரா டட்டாரியோ (Alexandra Daddario) என்பவரின் புகைப்படத்தை இந்தியர் ஒருவர் எடிட் செய்து சமூக வலைதளத்தில் அவருடன் செல்ஃபி எடுத்ததுபோல் பதிவிட்டிருந்தார்.

இந்தப்போட்டோ சமூக வலைதளத்தில் வைரலானது. இதைப்பார்த்த அலெக்ஸாண்ட்ரா டட்டாரியோ (Alexandra Daddario) இந்த வார இறுதியின் நகைச்சுவை என்று பதிவிட்டிருந்தார்.
இதைப்பார்த்த இந்திய இளைஞர்  நீங்கள் இதைப் பகிர்வீர்கள் என நினைக்கவில்லை என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.