1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By bala
Last Modified: திங்கள், 5 ஜூன் 2017 (12:14 IST)

புதுமுக நடிகையை பக்கத்து வீட்டுக்கு வாடகைக்கு அழைத்த நடிகர்!

நடிகர் விதார்த், இயக்குனர் பாரதிராஜா நடிப்பில் விரைவில் வெளிவர உள்ள படம் குரங்கு பொம்மை.


 


நித்திலன் இயக்கத்தில், அஜனீஷ் லோக்நாத் இசையில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில்பாரதிராஜா, நடிகர் எஸ்.வி.சேகர், நடிகர் இயக்குநர் மனோபாலா, நடிகர் இயக்குநர் பார்த்திபன், இயக்குநர் தரணி, நடிகர் சிபிராஜ், நடிகர் விதார்த், தயாரிப்பாளர், நடிகர் பி.எல்.தேனப்பன், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, நடிகர் மைம்கோபி, டான்ஸ் மாஸ்டர் ராதிகா, ஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ் LLP  நிறுவனத்தின் நிர்வாக தயாரிப்பாளர் கண்ணன், உள்பட பலர் கலந்துகொண்டனர்.

விழாவில் பார்த்திபன் பேசுகையில், இந்த படத்தின் கதாநாயகி, டெல்னா டேவிஸை எல்லோரும் பக்கத்து வீட்டு பெண் போல அழகாக இருக்கிறார் என்றார்கள். என் பக்கத்து வீட்டுல யாரும் டெல்னா டேவிஸ் மாதிரி அழகா இல்ல. எனவே டெல்னா டேவிஸ், நீங்க என் பக்கத்து வீட்டுக்கு வாடகைக்கு வந்தீங்கன்னா, நானும் உங்களை என் பக்கத்து வீட்டு பொண்ணுன்னு சொல்லிப்பேன் என்றார்.