1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Sasi)
Last Updated : வெள்ளி, 26 மே 2017 (10:31 IST)

ரஜினிக்கு ஜோடியாக இரண்டு நடிகைகளா?

ரஜினியின் ‘காலா’ படத்தில், அவருக்கு ஜோடியாக இரண்டு நடிகைகள் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.

 
பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் ‘காலா’. மும்பையில் வாழும் நெல்லை மக்களைக் காக்கும் தாதாவாக ரஜினி  நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஜி.முரளி ஒளிப்பதிவு செய்கிறார். தனுஷ் தயாரிக்கும் இந்தப் படத்தின்  படப்பிடிப்பு, வருகிற 28ஆம் தேதி மும்பையில் தொடங்க இருக்கிறது.
 
இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்க, பாலிவுட் நடிகையான வித்யாபாலனிடம் கேட்கப்பட்டது. ஆனால், அவர் மறுத்துவிட்டார். எனவே, அவருக்குப் பதிலாக பாலிவுட் நடிகையான ஹுமா குரேஷியை ஒப்பந்தம் செய்தனர். இந்நிலையில், அஞ்சலி பட்டில் என்ற இன்னொரு பாலிவுட் நடிகையும் படத்தில் இணைந்துள்ளார். இரண்டு நடிகைகளுக்குமே ஒரு வயதுதான் வித்தியாசம்  என்பதால், இருவருமே ரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.