மத்திய அரசின் முடிவு தந்திரமான வித்தை: பெட்ரோல், டீசல் விலை குறித்து ப சிதம்பரம்..!
பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று முதல் குறைக்கப்பட்டுள்ளதை அடுத்து இது மத்திய அரசின் தந்திரமான வித்தை என முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்
பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பு குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்படும் என்று கடந்த வாரமே நான் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்து இருந்தேன், அது இன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது
நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு ஒருவேளை மீண்டும் பாஜக ஆட்சி வந்தால் மீண்டும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்த உயர்த்தப்படும் என்றும் தெரிவித்தார். கேஸ் சிலிண்டர்களின் விலையும் தற்போது 100 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது, இதன் விலையும் தேர்தலுக்கு பின்னர் நான் உயர்த்தப்படும் என்றும் இது ஒரு மாதிரியான தந்திரமான வித்தை தான் என்றும் மத்திய அரசு அந்த தந்திரமான வித்தையை கடைபிடித்து வருகிறது என்றும் ப சிதம்பரம் தெரிவித்தார்
முன்னதாக பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ``பெட்ரோல் மற்றும் டீசல் விலையை ரூ.2 குறைத்ததன் மூலம், செயல்திறன் மிக்க பிரதமர் மோடி, இந்த நாட்டின், அதாவது தனது குடும்பத்தின் நலனில் அக்கறை மிக்கவர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் என தெரிவித்துள்ளார்.
Edited by Siva