செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Suga)
Last Modified: வியாழன், 20 ஜூலை 2017 (21:01 IST)

விஜய் சேதுபதி படத்தில் இருந்து விலகிய ஒளிப்பதிவாளர்

விஜய் சேதுபதி நடிக்கும் ‘அநீதி கதைகள்’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்துவந்த பி.சி.ஸ்ரீராம், அதிலிருந்து விலகியுள்ளார்.


 
 
எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும், கதை தனக்குப் பிடித்திருந்தால் மட்டுமே ஒளிப்பதிவு செய்ய ஒப்புக் கொள்வார் பி.சி.ஸ்ரீராம். அதேபோல், சின்ன நடிகர் என்றும் பார்க்க மாட்டார்.

அதனால் தான், கடந்த எட்டு வருடங்களில் 6 படங்களுக்கு மட்டுமே ஒளிப்பதிவு செய்துள்ளார். அவருடைய ஒளிப்பதிவில் 2015 ஆம் ஆண்டு ‘ஓ காதல் கண்மணி’ படமும், 2016ஆம் ஆண்டு ‘ரெமோ’ படமும் ரிலீஸானது.அதன்பிறகு, ‘ஆரண்ய காண்டம்’ தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிக்கும் ‘அநீதி கதைகள்’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்து வந்தார்.

ஆனால், அந்தப் படத்தின் படப்பிடிப்பு தள்ளிக்கொண்டே போனதால், பாதியில் இருந்தே இந்தப் படத்தில் இருந்து விலகியுள்ளார் பி.சி.ஸ்ரீராம். ’24 ஏஎம் ஸ்டுடியோஸ்’ தயாரிப்பில் பிரபு ராதாகிருஷ்ணன் இயக்கும் படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தப் படத்தில், ஃபஹத் ஃபாசில் ஹீரோவாக நடிக்கிறார்.