காட்டேரிக்கு கைகொடுத்த ஓவியா
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஓவியாவை பல படங்களில் நடிக்க வைக்க திரையுலகினர் முயற்சி செய்து வருகின்றனர். 'இருட்டு அறையில் முரட்டு குத்து' உள்பட ஒருசில படங்களில் அவர் நடிப்பதாக செய்தி வெளியானாலும், அவை உறுதி செய்யப்படாத தகவல்களாக இருந்தன
இந்த நிலையில் ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கும் அடுத்த படத்தில் ஓவியா நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஞானவேல்ராஜா வெளியிடும் 'ஹரஹர மஹாதேவி' பத்திரிகையாளர் காட்சி சென்னை சத்யம் திரையரங்கில் நடந்தது. இந்த அரங்கில் ஞானவேல்ராஜாவின் அடுத்த பட அறிவிப்பு வெளியானது
'காட்டேரி' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பிரபல நடிகர் சாய்குமாரின் மகன் ஆதி ஹீரோவாகவும், அவருக்கு ஜோடியாக ஓவியாவும் நடிக்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை 'யாமிருக்க பயமே' பட இயக்குனர் டிகே இயக்குகிறார். ஆக, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் காட்டேரிக்கு கைகொடுத்துள்ளார் ஓவியா