திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 25 ஜூலை 2017 (00:58 IST)

கல்லுக்கு கூட சாரி சொல்ற குழந்தை மனசு! ஓவியாடா....

பிக்பாஸ் நிகழ்ச்சியில் காலை எட்டு மணிக்கு எழுந்திருக்கும்போது தினமும் ஒரு பாட்டு போடுவது வழக்கம். அதேபோல் நேற்றைய நிகழ்ச்சியிலும் ஒரு பாடல் போடப்பட்டது.



 
 
வழக்கம்போல் எனர்ஜியுடன் எழுந்திருந்து ஆட்டம் போட்ட ஓவியா, பின்னர் வெளியே வந்தும் தனது டான்ஸை தொடர்ந்தார். அப்போது அவர் தவறுதலாக ஒரு கல்லின்மீது காலால் இடித்துவிட்டார். உடனே கல் இடம் சாரி கேட்டார்.
 
பொதுவாக கல்லின் மீது கால் பட்டால் எல்லோரும் கல்லை திட்டுவது வழக்கம். ஆனால் கல்லாக இருந்தாலும் தனது காலால் மிதிபட்டது என்பதற்காக சாரி சொன்ன ஓவியாவின் குழந்தை மனம் யாருக்கும் வராது என்று நெட்டிசன்கள் டுவிட்டரில் பதிவு போட்டு அதை டிரெண்டுக்கும் கொண்டு வந்துவிட்டனர். 
 
ஒருசிலரை கல் மனசு என்று கூறுவார்கள். ஆனால் ஓவியாவுக்கு கல்லையும் கரைய வைக்கும் இனிய மனசு என்பதால்தான் அவருக்கு நாளுக்கு நாள் ரசிகர்களின் கூட்டம் அதிகரித்து கொண்டே போகின்றது.