வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Caston
Last Modified: சனி, 5 ஆகஸ்ட் 2017 (17:57 IST)

பிக் பாஸ் வீட்டில் மீண்டும் நுழைந்தார் ஓவியா: ஓவியா ஆர்மி ஹேப்பி அண்ணாச்சி!

பிக் பாஸ் வீட்டில் மீண்டும் நுழைந்தார் ஓவியா: ஓவியா ஆர்மி ஹேப்பி அண்ணாச்சி!

மன அழுத்தம் காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நடிகை ஓவியா இன்று மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்ததாக செய்திகள் வருகின்றன.


 
 
நடிகை ஓவியா தற்கொலை செய்ய முயற்சித்ததாகவும், மன அழுத்தம் காரணமாக வெளியேறியதாகவும் நேற்றிலிருந்து தகவல்கள் பரவி வந்தது. இந்நிலையில் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விடைபெறுகிறார் என கூறப்பட்டது.
 
இப்படி வெளிவரும் செய்திகள் உண்மையா பொய்யா? ஓவியாவுக்கு உண்மையிலேயே என்ன ஆச்சு என்பது புரியாமல் அவரது தீவிர ரசிகர்கள் இணையத்தை அலறவிட்டு வந்தனர். ஓவியா இல்லாமல் பிக் பாஸ் இல்லை என ஹேஷ் டேக் உருவாக்கி அதனை ட்ரெண்ட் ஆக்கி வந்தனர்.
 
இந்நிலையில் நடிகை ஓவியா தான்னை பற்றி பரவி வந்த வதந்திக்கு விளக்கம் அளித்தார். அதில் நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது உண்மை தான். மீண்டும் நிகழ்ச்சிக்கு செல்ல பேச்சுவார்த்தை நடந்து வருவதாக விளக்கம் அளித்துள்ளார்.
 
இதனையடுத்து ஓவியா இல்லையென்றால் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்க மாட்டோம் என ஒட்டுமொத்தமாக அனைவரும் கூறி வருவதால் சேனல் நிர்வாகம் மிரண்டு போய் உள்ளது. இதனால் ஓவியாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.
 
இந்நிலையில் இந்த வாரம் வெளியேற்றப்படுபவர்கள் லிஸ்டில் ஜூலி, வையாபுரி, ஓவியா ஆகியோர் இருந்ததால் அவர்களில் யார் வெளியேற்றப்படப்போகிறார்கள் என்பது கமல் முன்னிலையில் இன்று ஷூட் செய்யப்பட இருந்தது. அதுமட்டுமல்லாமல் ஓவியாவைப் பற்றி பரவி வரும் தகவல்களை தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
 
எனவே இது பற்றி இன்று இரவு பேச உள்ள கமல் ஓவியாவின் உடல் மற்றும் மன நலம் பற்றியும் தெளிவுபடுத்த இருக்கிறார். இதனால் ஓவியா நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதையடுத்து ஓவியாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி சம்மதிக்க வைத்து தற்போது மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டு இருக்கிறார் என தகவல் வருகிறது.
 
மேலும் தனது உடல் மற்றும் மன நலத்தை கருத்தில்கொண்டு ஓவியா வெளியேற விரும்பினால் அவர் வெளியேற்றப்படவும் வாய்ப்பு உள்ளது.