1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: ஞாயிறு, 13 ஆகஸ்ட் 2017 (23:42 IST)

பிக்பாஸ் வீட்டில் மீண்டும் ஓவியா? கமல் மறைமுக பதில்

பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்று சக்தி வெளியேறிய பின்னர் வீட்டில் உள்ள நபர்களின் எண்ணிக்கை 7ஆக குறைந்தது. இன்னும் 50 நாட்கள் மீதமிருக்கும் நிலையில் நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்திற்காக கண்டிப்பாக கூடுதல் நபர்களை பிக்பாஸ் வீட்டில் இணைக்க வேண்டிய கட்டாயத்தில் நிகழ்ச்சியின் நிர்வாகத்தினர் உள்ளனர்.



 
 
இதுகுறித்து கமல்ஹாசனும் இன்றைய நிகழ்ச்சியில் புதுவரவுகள் உண்டு என்றும், அதிலும் நீங்கள் சந்தோஷப்படும் நபரும் வருகை தரவுள்ளதாகவும் ஆடியன்ஸ்களை நோக்கி கூறினார். இந்த கூற்று ஓவியா மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் திரும்ப வாய்ப்பு இருப்பதையே குறிப்பதாக தெரிகிறது.
 
பிக்பாஸ் வீட்டில் வேறு எந்த நடிகைகள் வந்தாலும் ஓவியாவுக்கு ஈடு இணை இருக்காது என்பது பிந்துமாதவியின் மூலம் உறுதியானது. பிந்துமாதவியால் ஓவியாவின் இடத்தை ஒரு சதவீதம் கூட நிரப்ப முடியவில்லை. எனவே மீண்டும் ஓவியா பிக்பாஸ் வீட்டின் உள்ளே வர அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.