வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 26 அக்டோபர் 2024 (09:43 IST)

இந்த வாரம் OTT Release! மிஸ் பண்ணக் கூடாத தமிழ் படங்கள்..!

OTT Release

திரையரங்கில் வெளியான படங்கள் சில நாட்களில் ஓடிடி தளங்களிலும் வெளியாகும் நிலையில் இந்த வாரம் பல முக்கியமான படங்கள் ஓடிடி ரிலீஸாகியுள்ளன. தவற விடக்கூடாத சில ஓடிடி ரிலீஸ் உங்களுக்காக..!

 

 

மெய்யழகன்:

 

ப்ரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த்சாமி நடித்து வெளியான படம் மெய்யழகன். தஞ்சை விவசாய பகுதிகளின் எழில்மிகு அழகுடன், மக்களின் வாழ்க்கை, அன்பு குறித்தும் பேசும் அழகான ரியாலிட்டி படம். திரையரங்கில் வெளியானபோதே பல உணர்வுகளை சொன்ன இந்த படம் தற்போது நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

 

Meiyazhagan.
 

ஹிட்லர்

 

பன்முகத்தன்மை கொண்ட இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி நடித்து வெளியான படம் ஹிட்லர். கௌதம் மேனன், ரியா சுமன் உள்ளிட்ட பலர் நடித்த இந்த படம் சஸ்பென்ஸ், ஆக்‌ஷன் வகை படங்களை விரும்புவோருக்கு நல்ல சாய்ஸ். தற்போது இந்த படம் அமேசான் ப்ரைம் மற்றும் சிம்ப்ளி சவுத் ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ளது.

 

கோழிப்பண்ணை செல்லதுரை:

 

மண் வாசம் மாற படங்களை தரும் இயக்குனர் சீனு ராமசாமியின் அடுத்த படைப்பு கோழிப்பண்ணை செல்லதுரை. யோகி பாபு, பவா செல்லதுரை, ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் இயல்பான வாழ்க்கையிலிருந்து சொல்லப்படுகிறது. பரபரப்பான சண்டை போன்றவற்றை தவிர்த்து அமைதியான அழகான வாழ்க்கைக் கதையை பார்க்க விரும்புவோருக்கு இந்த படம் சிம்ப்ளி சவுத் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

 

கடைசி உலகப்போர்:

 

kadaisi ulagapor
 

ஹிப்ஹாப் ஆதியே நடித்து, இயக்கி, தயாரித்து, இசையமைத்துள்ள படம் மூன்றாம் உலகப்போர். எதிர்காலத்தில் கடைசி உலகப்போர் எப்படி வரும்? என்ன காரணத்திற்காக வரும்? என்பதை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படம் குறிப்பிடத்தக்க வரவேற்பை பெற்றது. இந்த படம் டெண்ட்கொட்டாய் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

 

ஐந்தாம் வேதம்:

 

aindham vedham
 

விடாது கருப்பு உள்ளிட்ட 90ஸ் கிட்ஸின் பேவரிட் த்ரில்லர்களை இயக்கிய நாகா இயக்கத்தில் வெளியாகியுள்ள வெப் தொடர் ஐந்தாம் வேதம். நாகாவின் வழக்கமான அமானுஷ்யம், ஆன்மீகம், அறிவியல் கலந்த பேக்காக வெளியாகியுள்ள இந்த தொடரில் தன்ஷிகா, ஒய் ஜி மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த தொடர் ஜீ5 தளத்தில் வெளியாகியுள்ளது.

 

Edit by Prasanth.K