ஐயோ...! உண்மையாவே நாங்க அப்படி இல்லை - நாகசைதன்யா

Last Modified வியாழன், 8 நவம்பர் 2018 (12:15 IST)
திருமணத்திற்குப் பின் சமந்தா தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தாலும் முதன்முறையாக தன் கணவர் நாக சைதன்யாவுடன் இணைந்து நடிக்கிறார்.
இயக்குனர் சிவா நிர்வானா இந்த படத்தை இயக்குகிறார். இந்நிலையில் இந்த படத்தை பற்றி நேர்காணல் ஒன்றில் பேசிய நாக சைதன்யா, 
 
நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்றுவதால் ஒரே நேரத்தில் வீட்டிற்கு செல்கிறோம். ஆனால், காலையில் எனக்கு முன்பாகவே சமந்தா சென்றுவிடுவார். அதிக நேரங்களை நாங்கள் படப்பிடிப்புத் தளத்தில் செலவிடுகிறோம். இந்தப் படத்தில் நாங்கள் இருவரும் அதிகமாக சண்டை போட்டுக்கொள்ளும் காட்சிகள் உள்ளன. 
 
ஆனால், உண்மையில் நாங்கள் அப்படி இல்லை. இதனால் அந்த காட்சிகளில் நடிப்பது கொஞ்சம் கடினமாக இருக்கிறது என கூறியுள்ளார்.
 
திருமணத்திற்கு பிறகு இருவரும் சேர்ந்து நடிக்கும் இந்தப்படம் ரசிகர்களிடயே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :