திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 24 ஜூன் 2022 (19:09 IST)

பிரபல வில்லன் நடிகர் தற்கொலை: திரையுலகம் அதிர்ச்சி

villain
பிரபல வில்லன் நடிகர் தற்கொலை: திரையுலகம் அதிர்ச்சி
பிரபல வில்லன் நடிகர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
ஒடிசா மாநிலத்தில் பிரபல வில்லன் நடிகராக வலம் வந்தவர்  ராய்மோகன் பரிதா. இவர் தனது வீட்டில் தூக்கில் தொங்கி இன்று காலை தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. 
 
இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர் என்றும் தற்கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
 
 58 வயதான  ராய்மோகன் பரிதா, நூற்றுக்கும் அதிகமான படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது