1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 10 பிப்ரவரி 2022 (15:03 IST)

அமேசான் ப்ரைமில் ஜேம்ஸ்பாண்ட் நோ டைம் டூ டை! – ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சமீபத்தில் வெளியான ஜேம்ஸ்பாண்ட் படமான நோ டைம் டூ டை வெளியீட்டு தேதியை அமேசான் ப்ரைம் அறிவித்துள்ளது.

நாவல் கதையாக தொடங்கி, காமிக்ஸ் தொடராக வளர்ந்து திரைப்படமாக உயிர்பெற்ற கதாப்பாத்திரம் ஜேம்ஸ் பாண்ட். இயான் ப்ளெமிங் எழுதிய இந்த கதை 1962ல் முதன்முறையாக திரைப்படமாக வெளிவந்தது. ஷான் கொனெரி நடிப்பில் வெளிவந்த ‘டாக்டர்.நோ’ திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு இதுவரை 24 படங்கள் ஜேம்ஸ் பாண்ட் கதாப்பாத்திரத்தை வைத்து உருவாகியுள்ளன.

இந்த பட வரிசையில் கடந்த ஆண்டு “நோ டைம் டூ டை” வெளியானது. கடந்த 4 படங்களில் ஜேம்ஸ் பாண்டாக நடித்த டேனியல் க்ரெய்க் இதிலும் ஹீரோவாக நடித்துள்ளார். தற்போது ஜேம்ஸ் பாண்ட் படங்களின் ஓடிடி உரிமத்தை பெற்றுள்ள அமேசான் ப்ரைம் இந்த படத்தை மார்ச் 4ம் தேதி வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது.