வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 12 ஏப்ரல் 2021 (18:41 IST)

திருமணம் செய்யும் எண்ணமில்லை –முன்னணி நடிகை

தனக்கு திருமணம் செய்துகொள்ளும் எண்ணமில்லை என முன்னனி நடிகை கூறியுள்ளார்.

காதலில் விழுந்தேன் என்ற படத்தில் நலுகுக்குச் ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் சுனைனா. அதன்பிறகு, நீர்ப்பறவை மற்றும் வம்சம் உள்ளிட்ட படங்களில் நடித்து மக்களிடம் பிரபலமானார்.

கடந்த ஆண்டு இவரது நடிப்பில் வெளியான சில்லுக்கருப்பட்டி என்ற படத்தில் அவரது நடிப்பை பலரும் பாராட்டினர்.

பின்னர் டிரிப் என்ற படத்திலும் ஒரு தெலுங்கிலும் சுனைனா நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக ஒரு தகவல் வெளியானது.

இதற்குப் பதிலளித்துள்ள அவர், நான் திருமணம் செய்துகொள்வதாக வெளியான் தகவல் உண்மையில்லை. நான் இப்போதைக்கு திருமணம் செய்துகொள்ளும் ஐடியா இல்லை எனத் தெரிவித்துள்ளார். நான் தொடர்ந்து சினிமாவில் நடிப்பதையே விரும்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.