திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimuktheesh
Last Updated : திங்கள், 20 மார்ச் 2017 (20:44 IST)

படங்களில் நடிக்கும் ஆசையே இல்லை: சிம்புவின் ஆசை

நடிக்கும் ஆசை இல்லை கஷ்டமான நேரத்தில் எனக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்காகவே படம் பண்ணுகிறேன் என சிம்பு தெரிவித்துள்ளார்.


 

 
தற்போது சிம்பு நடித்துள்ள அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தின் டீசர் வெளியானது. அதில் அஸ்வின் தாத்தா காதாபாத்திரத்தில் கலக்கி இருந்தார். இந்நிலையில் ஃபேஸ்புக் லைவ் மூலம் ரசிகர்களிடம் பேசிய சிம்பு கூறியதாவது:-
 
எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. எனக்கு படம் நடித்து பெயர் வாங்க வேண்டும் என்றெல்லாம் ஆசை இல்லை. எனக்கு கஷ்டமான நேரத்தில் கூட எனக்காக நிறைய பேர் நின்னுறுக்காங்க, அவர்களுக்காக படம் பண்ணும் என்கிற ஒரே காரணத்தில் தான் படம் பண்ணிக்கிட்டு இருக்கேன், என்று கூறியுள்ளார்.