வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : புதன், 4 ஆகஸ்ட் 2021 (16:04 IST)

தனுஷின் ‘D44' படத்தில் இணைந்த ’மெர்சல்’ நடிகை!

தனுஷ் நடித்து வரும் மாறன் திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் அடுத்ததாக அவர் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை மித்ரன் ஜவஹர் இயக்க உள்ளார் என்பதும் அனிருத் இசையமைக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்று காலை இந்த படத்தில் பாரதிராஜா மற்றும் பிரகாஷ்ராஜ் நடிக்க உள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தில் நித்யா மேனன் இணைந்து உள்ளதாக அறிவித்துள்ளது. தனுஷ் ஜோடியாக நித்யா மேனன் நடிக்கிறாரா? அல்லது முக்கிய கேரக்டரில் நடிக்கிறாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். மேலும் நித்யாமேனன் விஜய்யின் ‘மெர்சல்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தில் ராஷி கண்ணா மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகிய இருவரும் நாயகிகளாக நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் துவங்க இருப்பதாகவும் இந்த ஆண்டுக்குள் படப்பிடிப்பை முடித்து விட்டு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த படத்தை ரிலீஸ் செய்ய சன் பிக்சர்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது