ஒரே தட்டில் உணவருந்தும் நித்யா மேனன் – அசோக் செல்வன் வைரல் போட்டோ!
கொரோனா காலத்தில் சினிமா படப்பிடிப்புகளுக்கு தடைவிதிக்கப்பட்ட நிலையில், சில நாட்களுக்கு முன் அரசு படப்பிடிப்புகளுக்கு சில தளர்வுகளுடன் அனுமதி வழங்கியது.
இதையொட்டி சினிமாத்துறையினர் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் நித்யா மேனன், அசோக் செல்வன் இணைந்து நடிக்கும் நின்னிலா நின்னிலா வெண்ணிலா என்ற படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.
இப்படத்தை அனி சசி என்பவர் இயக்கிவருகிறார். இப்படத்தின் ஹீரோ அசோக் செல்வனும், நித்யாமேனனும் சாப்பிடும்போது ஒரு வாரமும் ஒரே தட்டில் சாப்பிட்டுள்ளனர். இப்படத்தை நித்யாமேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.