செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha
Last Updated : வியாழன், 17 அக்டோபர் 2019 (11:45 IST)

ப்ளீஸ் திருமணம் வேண்டாம்: லிவிங் டுகெதரில் நித்யா மேனன்?

கோலிவுட்டில் காஞ்சனா 2, ஓ காதல் கண்மணி, மெர்சல் உட்பட பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் ஃபேவரைட் நடிகையாக இருக்கும் நித்யா மேனன் தொடர்ந்து கன்னடம், தெலுங்கு  படங்களில் நடித்து வருகிறார். மேலும் தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘த அயர்ன் லேடி’யிலும் நடிக்கிறார்.

மிஷ்கின் இயக்கத்தில் 'சைக்கோ' படத்தில் நடித்து முடித்திருக்கும் நித்யா மேனன் சமீபத்தில் பேட்டி ஒன்றில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மாவின் கதையை எல்லாரும் படமாக எடுக்க நினைக்கிறாங்க. அதுல யார்? கதை மக்களுக்கு பிடித்திருக்கிறதோ அதை ரசிக்கட்டும் என்று சொல்லி முடித்த அவரிடம், உங்கள் திருமணம் பற்றி சொல்லுங்கள் எனக் கேட்டதற்கு, இப்போதைக்கு எனக்கு திருமணத்தில் எந்த ஒரு உடன்பாடும் இல்லை. இவர் தான் என் வாழ்க்கை துணை என எனக்கு எப்போது தோணுதோ அப்ப உடனே கல்யாணம் செய்துகொள்வேன். 
 
ஆனால், இதுவரை அப்படி யாரையும் நான் பாக்கல. அதுமட்டுமில்லாமல் என் வீட்டிலும் இப்ப கல்யாணம் பண்ணிக்கோன்னு எந்த ஒரு கட்டாயமும் இல்லை. எனவே எனக்கு  சரியான நேரம்  வரும் போது என் திருமணம் குறித்து நானே கூறுவேன். அதே நேரத்துல நான்  ‘ லிவிங் டுகெதர், லெஸ்பியன் ரிலேஷன்ஷிப்’ மாதிரியான சவாலான கதாபாத்திரங்களில் நடிச்சிருக்கேன். ஆனால் அதுக்காக என் வாழ்க்கையில் அப்படி  நினைப்பது ரொம்ப தப்பு. அந்த தப்பை நான் ஒரு போதும் செய்யமாட்டேன் என கூறினார்.